×

ஒடிசா முதல்வர் பட்நாயக் வேட்பு மனு தாக்கல்

புவனேஸ்வர்: பிஜூ ஜனதா தள தலைவர் மற்றும் ஒடிசா முதல்வரான நவீன் பட்நாயக் போலாங்கீர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட கன்டபஞ்சி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
ஏற்கனவே இவர் கஞ்சம் மாவட்டத்தில் உள் ஹிஞ்சிலி தொகுதியில் போட்டியிடுவதற்கு வேட்பு தாக்கல் செய்தார். கடந்த 2019ம் ஆண்டும் ஹிஞ்சிலி மற்றும் பிஜேபூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். பின்னர் பிஜேபூர் தொகுதியில் ராஜினாமா செய்துவிட்டு ஹிஞ்சிலி தொகுதி எம்எல்ஏவாக நீடித்தார். இந்நிலையில் இந்த முறை அவர் கன்டபஞ்சி தொகுதியை தேர்வு செய்துள்ளார்.

The post ஒடிசா முதல்வர் பட்நாயக் வேட்பு மனு தாக்கல் appeared first on Dinakaran.

Tags : Odisha ,Chief Minister Patnaik ,Bhubaneswar ,Biju Janata ,Dal ,Chief Minister ,Naveen Patnaik ,Kandapanji ,Bolangir ,Hinchili ,Ganjam district ,
× RELATED காங்கிரஸ் பெண் வேட்பாளர் திடீர்...